உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தினமும் இரு காய்ச்சல் தடுப்பு முகாம்கள் நடத்த உத்தரவு

தினமும் இரு காய்ச்சல் தடுப்பு முகாம்கள் நடத்த உத்தரவு

கம்பம்: சீதோஷ்ணநிலை மாற்றம் காரணமாக காய்ச்சல் பரவலை கட்டுப்படுத்த நடமாடும் மருத்துவ குழுவினர் தினமும் இரண்டு மருத்துவ முகாம்களை நடத்த பொதுச் சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. வடகிழக்கு பருவ மழையும், புயல் மழையும் இணைந்து வெளுத்து வாங்குகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமம் அடைகின்றனர். சீதோஷ்ண நிலை மாற்றத்தால் சாதாரண வைரஸ் காய்ச்சல் பரவுகிறது. டெங்கு காய்ச்சல் பரவும் அபாயமும் உள்ளது. எனவே, பரவி வரும் காய்ச்சலை கட்டுப்படுத்த பொதுசுகாதாரத் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள நடமாடும் மருத்துவக் குழுவினர் நாள் ஒன்றுக்கு இரண்டு மருத்துவ முகாம்களை 'காய்ச்சல் தடுப்பு முகாம்களாக' நடத்த பொது சுகாதாரத் துறை உத்தர விட்டுள்ளது. அதன்படி ஒவ்வொரு வட்டாரத்திலும் கிராமங்கள் தோறும் காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. சித்தா பிரிவு சார்பில் நிலவேம்பு, கபசுர குடிநீர் வழங்கும் முகாம்களும் நடத்தப்பட்டு வருகிறது. டாக்டர் சிராசுதீன் தலைமையிலான குழுவினர் சுருளிப்பட்டி நாராயணத்தேவன்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டிகளில் சித்த மருத்துவ முகாம்களை நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ