மேலும் செய்திகள்
அரசு மருத்துவமனையில் ஒருங்கிணைப்பு குழு ஆலோசனை
06-Sep-2024
ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி அருகே லட்சுமிபுரத்தில் பனை விதைகள் நடுதல் மற்றும் விதை பந்துகள் தூவும் விழா நடந்தது.அற நல்லுலகம் பொதுநல அறக்கட்டளை, ஆண்டிபட்டி வாசவி கிளப் சார்பில் லட்சுமிபுரம் விநாயகர் கோயில் விளாகத்தில் பனை விதை நடும் விழா நடந்தது. ரங்கசமுத்திரம் ஊராட்சி துணைத் தலைவர் ஜெயராமன் தலைமை வகித்தார். வாசவி கிளப் தலைவர் ஜெயந்தி, செயலாளர் ரேவதி, பொருளாளர் ஜமுனா, சர்வதேச ஒருங்கிணைப்பாளர் ராம்சிவா ஆகியோர் முன்னிலை வகித்தனர். லட்சுமிபுரம் ஊர் தலைவர் திருப்பதி, ஆண்டிபட்டி வர்த்தக பிரமுகர் அழகர்சாமி, அறிவு திருக்கோயில் பாரிஜாதம் பங்கேற்றனர்.லட்சுமிபுரம் வடக்கு குளம், தெற்கு குளம், அரசு பள்ளி வளாகங்களில் 100க்கும் மேற்பட்ட பனை விதைகள் நடவு செய்யப்பட்டன.விதைப்பந்துகள் பல இடங்களில் தூவப்பட்டன. நிகழ்ச்சியில் கிராம பொதுமக்கள், இளைஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.
06-Sep-2024