உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பனை விதைகள் நடும் விழா

பனை விதைகள் நடும் விழா

போடி: போடி அருகே சிலமலை பாறைக்குளம் கண்மாய் பகுதியில் நாட்டு நலப் பணித்திட்ட மாணவர்கள் சார்பில் பனை விதைகள் நடும் விழா நடந்தது. கலெக்டர் ஷஜீவனா தலைமை வகித்து பனை விதைகள் நடுவதை துவக்கி வைத்தார்.போடி சி.பி.ஏ., கல்லூரி முதல்வர் சிவக்குமார், போடி திருமலாபுரம் நாடார் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பிரிதிவிராஜன், ஜ.கா.நி., மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் ராமசுப்பிரமணி, கோட்டூர் பாலிடெக்னிக் முதல்வர் சரவணக்குமார், கிரீன் லைப் பவுண்டேஷன் செயலாளர் சுந்தரம், போடி லயன்ஸ் கிளப் தலைவர் முகமது சேக் இப்ராகிம், எஸ்.கே.எம். புட்ஸ் மேலாளர் லோகநாதன் முன்னிலை வகித்தனர். நாட்டு நலப் பணித் திட்ட மாணவர்கள் மூலம் பாறைக்குளம் பகுதியில் 2 ஆயிரம் பனை விதைகள் நடப்பட்டன.இதற்கான ஏற்பாடுகளை பசுமை பங்காளர் அமைப்பு நிறுவனர் பனை முருகன், என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர்கள் முருகேசன், கருப்பையா, வைஷ்ணவி செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ