மேலும் செய்திகள்
2ம் நாளாக ஆக்கிரமிப்பு அகற்றம்
27-Sep-2025
தேவதானப்பட்டி : மேல்மங்கலம் அம்மாபட்டி தெருவில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி பொதுமக்கள் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பெரியகுளம் ஒன்றியம், மேல்மங்கலம் ஊராட்சி 12 வது வார்டில் அம்மாபட்டி தெரு உள்ளது. ஆலமரத்து முனியாண்டி கோயிலில் துவங்கி, மேல்மங்கலம் பஸ்ஸ்டாப் வரை 200 மீட்டர் தூர பொதுப்பாதை உள்ளது. இந்த 15 அடி பாதையில் லாரி சென்று வந்தது. இந்நிலையில் சில மாதங்களாக 50 மீட்டர் தூரத்தில் சிலர் பாதையை ஆக்கிரமித்து வீட்டுக்கு முன் இரும்பு கம்பி வேலி அமைத்தும், எதிர்ப்புறம் பெட்டியை வைத்து ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். 15 அடி பொதுப்பாதை 3 அடியாக சுருங்கியது. இதனால் டூவீலர் செல்வதற்கு சிரமமானது. இந்தப்பகுதி மக்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி ஊராட்சியில் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி அலுவலகம் முற்றுகை: இதனால் நேற்று பொதுமக்கள் ஊராட்சி அலுவலகத்தை காலை 9:30 மணி முதல் காலை 11 மணி வரை முற்றுகையிட்டு ஆக்கிரமிப்பினை அகற்றக்கோரி கோஷமிட்டனர். வி.ஏ.ஓ., ராஜவேல், ஜெயமங்கலம் எஸ்.ஐ., முருகப்பெருமாள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததால் முற்றுகை போராட்டம் கைவிடப் பட்டது.
27-Sep-2025