அணிவகுப்பு ஊர்வலம்
ஆண்டிபட்டி: சட்டசபை தேர்தலை முன்னிட்டு ஆண்டிபட்டியில் துணை ராணுவப்படை, போலீசார் அணிவகுப்பு ஊர்வலம் நடந்தது. சக்கம்பட்டி தனியார் பெட்ரோல் பல்க்கில் இருந்து துவங்கிய அணிவகுப்பு ஊர்வலத்தை தேனி ஏ.டி.எஸ்.பி.,க்கள் ஜெரால்டு அலெக்சாண்டர், மகேஷ் ஆகியோர் துவக்கி வைத்தனர். சக்கம்பட்டி, ஆண்டிபட்டி, கொண்டமநாயக்கன்பட்டி வழியாக சென்று பழைய செக்போஸ்ட் அருகே ஊர்வலம் நிறைவடைந்தது. ஊர்வலத்தில் ஆண்டிபட்டி டி.எஸ்.பி., சிவசுப்பு, பயிற்சி டி.எஸ்.பி., சீதாலட்சுமி, இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.,க்கள், ஆயுதப்படை போலீசார், பட்டாலியன் போலீசார், துணை ராணுவ படையினர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.