உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  துணை ராணுவப் படை அணிவகுப்பு ஊர்வலம்

 துணை ராணுவப் படை அணிவகுப்பு ஊர்வலம்

போடி: சட்டசபை தேர்தலை முன்னிட்டு மத்திய துணை ராணுவப் படை, போலீசார் அணி வகுப்பு ஊர்வலம் போடியில் நடந்தது. கொடி அணி வகுப்பு ஊர்வலத்தை ஏ.டி.எஸ்.பி., கலைக் கதிரவன் துவக்கி வைத்தார். டி.எஸ்.பி., முருகன், துணை ராணுவப் படை டி.எஸ்.பி., ராஜாசிங் தோமர் முன்னிலை வகித்தனர். ஊர்வலம் போடி கட்டபொம்மன் சிலை முன்பாக துவங்கி காமராஜ் பஜார், பெரியாண்டவர் ஹைரோடு, எஸ்.எஸ். புரம், போஜன் பார்க் வழியாக நகராட்சி அலுவலகம் வரை சென்றனர். இன்ஸ்பெக்டர்கள் சரவணன், அய்யம்மாள் ஜோதி, செல்வம், உமா மகேஸ்வரி, மத்திய துணை ராணுவப் படையினர், போலீசார் உட்பட 82 பேர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !