மேலும் செய்திகள்
அடக்க நினைத்த போலீஸ்... அடங்க மறுத்த அண்ணாமலை
23-Dec-2025
மூணாறு: கேரள மாநிலம் மாட்டுபட்டி அணையில் ' பாரா சைலிங்'கில் இருந்து சுற்றுலா பயணி தண்ணீருக்குள் விழுந்து உயிர் தப்பிய சம்பவம் குறித்து சிறப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். மூணாறு அருகே மாட்டுபட்டி அணையில் தனியார் ஒத்துழைப்புடன் 'பாரா சைலிங்' எனும் சாகச பொழுது போக்கு அம்சத்தை மின்வாரியம் சார்பிலான ஹைடல் டூரிசம் செயல்படுத்தி வருகிறது. அதிவேக படகில் பொறுத்தியுள்ள 'பாராசூட்' டில் ஒருவர் பறந்தவாறு பயணிக்கலாம். அதற்கு ஒரு சுற்றுக்கு ரூ.1800 வசூலிக்கின்றனர். விபத்து டிச.15ல் 'பாரா சைலிங்' கில் சென்ற தமிழக சுற்றுலா பயணி 'பாரா சூட்' செயலிழந்து தண்ணீருக்குள் விழுந்தார். அவரை சுற்றுலா படகு டிரைவர்கள் காப்பாற்றியதால் உயிர் தப்பினார். அச்சம்பவத்தை மூடி மறைத்த அதிகாரிகள் சுற்றுலா பயணியின் விலை உயர்ந்த கடிகாரம் தண்ணீரில் மூழ்கி பழுதடைந்ததால், அதற்கு ரூ.15 ஆயிரம் வழங்கி பிரச்னை வெளியில் தெரியாமல் பார்த்துக் கொண்டனர். இந்நிலையில் அச்சம்பவம் குறித்து அறிந்த மூணாறு சிறப்பு பிரிவு போலீசார் மாட்டு பட்டி அணைக்கு சென்று விசாரித்தனர். அதில் விதிமுறைகள் மீறப்பட்டதாக தெரியவந்தது. சம்பவத்தன்று பலத்த காற்று வீசிய நிலையில் 'பாரா சைலிங்' இயக்கப்பட்டதால் விபத்து ஏற்பட்டுள்ளது. அதன் விசாரணை அறிக்கை உயரதிகாரிகளிடம் தாக்கல் செய்யப்படும் என தெரிவிக்கப் பட்டது.
23-Dec-2025