உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கலெக்டர் உத்தரவை மீறி ஆற்றில் இறங்கிய பயணிகள்

கலெக்டர் உத்தரவை மீறி ஆற்றில் இறங்கிய பயணிகள்

மூணாறு: கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறில் கலெக்டர் விக்னேஸ்வரி தடையை மீறி ஆற்றில் இறங்கிய பயணிகளின் செயல் அதிருப்தியை ஏற்படுத்தியது.இடுக்கி மாவட்டத்தில் தொடர் கன மழையால் மண் மற்றும் நிலச்சரிவு அபாயம் உள்ளது.பாதுகாப்பு கருதி சுற்றுலா பகுதிகளை மூடவும், சுற்றுலா செயல்களுக்கு தடை விதித்தும் கலெக்டர் விக்னேஸ்வரி மே 29 உத்தரவிட்டார்.அதனை மீறி சில செயல்பாடுகள் நடந்தது தெரிய வந்ததால், தடை உத்தரவை மீறுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கவும் நேற்று முன்தினமும் கலெக்டர் உத்தர விட்டார். இந்நிலையில் மூணாறு அருகே மாங்குளம் ஊராட்சியில் வல்லியபாறைகுடிக்கு உத்தரவை மீறி சாகச ஜீப் பயணம் சென்ற சுற்றுலா பயணிகள், அங்கு ஆற்றில் வெள்ளப்பெருக்கையும் பொருட்படுத்தாமல் இறங்கினர்.அதனை கவனித்த உள்ளூர் மக்கள் கண்டித்துள்ளனர். அந்த ஆற்றில் மூழ்கி இரு ஆண்டுகளில் மாணவர்கள் உட்பட பத்து பேர் இறந்துள்ளனர்.வெயில் காலத்தில் கூட ஆற்றில் இறங்குவது மிகவும் ஆபத்தான நிலையில் மழை காலத்தில் கலெக்டரின் உத்தரவை மீறி சுற்றுலா பயணிகள் ஆற்றில் இறங்கியது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ