உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  பட்டாசு வெடித்ததால் பயணிகள் திணறல்

 பட்டாசு வெடித்ததால் பயணிகள் திணறல்

தேனி:ஆண்டிப்பட்டி தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் லோகிராஜன் தொண்டர்களுடன் நேற்று வேட்புமனு தாக்கல் செய்ய வந்தார். இதனால் மதுரை ரோட்டில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அப்போது பயணிகளுடன் நின்ற பஸ்கள் அருகில் தொண்டர்கள் பட்டாசு வெடித்தனர்.இதனால் பஸ்சுக்குள் இருந்த பயணிகள் புகை மண்டலத்திற்குள் சிக்கி மூச்சுவிட சிரமப்பட்டனர். குழந்தைகள் அலறினர். பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் ரோட்டில் பட்டாசு வெடிப்பதை தடுக்காமல் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் வேடிக்கை பார்த்ததால் பலரும் ஆத்திரம் அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை