மேலும் செய்திகள்
அரசு பஸ் டயர் வெடித்ததால் போக்குவரத்து பாதிப்பு
29-Jul-2025
தேனி : குமுளியில் இருந்து தேனி வழியாக அரசு பஸ் (TN 58 N2273) மதுரைக்கு சென்றது. பஸ்சில் 30க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்த பஸ் பழனிசெட்டிபட்டியை கடந்த தேனி நோக்கி வந்து கொண்டிருந்தது. கொட்டக்குடி ஆற்றுப்பாலத்தின் சில மீட்டருக்கு முன் பஸ் டயர் வெடித்தது. இதனால் பஸ் நடு ரோட்டில் நிறுத்தப்பட்டது. பயணிகள் இறக்கப்பட்டு வேறு பஸ்களில் அனுப்பபட்டனர். நடுரோட்டில் பஸ் நிறுத்தப்பட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அவ்வழியாக வந்த வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர். அரைமணி நேரத்திற்கு பின் மாற்றப்பட்டு பஸ் புறப்பட்டு சென்றது.
29-Jul-2025