உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தேனி புது பஸ் ஸ்டாண்டில் ஏ.டி.எம்., இல்லாததால் பயணிகள்அவதி

தேனி புது பஸ் ஸ்டாண்டில் ஏ.டி.எம்., இல்லாததால் பயணிகள்அவதி

தேனி : தேனி புது பஸ் ஸ்டாண்ட், பெருந்திட்ட வளாகத்தில் போதிய அளவில் ஏ.டி.எம்.,கள் இல்லாததால் பயணிகள், பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகின்றனர்.தேனி கர்னல் ஜான்பென்னிகுவிக் பஸ் ஸ்டாண்ட் 2014ல் பயன்பாட்டிற்கு வந்தது. பஸ் ஸ்டாண்ட் நுழைவு பகுதியில் இரு ஏ.டி.எம்.,கள் உள்ளன. இவற்றில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஏ.டி.எம்., மையத்தில் முறைகேடாக கடைகளுக்கு மின்சாரம் திருடியதால் அந்த ஏ.டி.எம்.,யை சில ஆண்டுகளுக்கு முன் மூடினர். தற்போது ஒரு ஏ.டி.எம்., மட்டும் மறைவாக உள்ளது. இதனை இரவில் குடிமகன்களின் மது பாராக செயல்படுவதால் பலரும் அதனை பயன்படுத்த இயலாத நிலை உள்ளது. அதே போல் பயணிகள் பலர் பஸ் ஸ்டாண்டில் ஏ.டி.எம்., மையத்தை தேடி அலைகின்றனர்.பெருந்திட்ட வளாகத்தில் மாவட்டவேலைவாய்ப்பு மையம், பதிவாளர் அலுவலகம், வேளாண், பள்ளிகல்வித்துறை, பொது சுகாதாரத்துறை, வட்டார போக்குவரத்து அலுவலகம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை என பல அரசுத்துறை அலுவலகங்கள் செயல்படுகி்னறன. இந்த அலுவலகங்களுக்கு தினமும் நுாற்றுக்கணக்கானோர் அலுவல் பணிக்காக வந்து செல்கின்றனர். அருகில் உள்ள மாவட்ட விளையாட்டு விடுதியில் 60 மாணவர்கள் தங்கி படிக்கின்றனர். ஆனால் இப்பகுதியில் ஏ.டி.எம்., மையங்கள் இல்லாததால் பொதுமக்கள், மாணவர்கள் புதுபஸ் ஸ்டாண்ட் அருகில் செயல்படும் தனியார் வங்கி ஏ.டி.எம்., ல் பணம் எடுக்க அல்லது செலுத்த 2 கி.மீ., பயணிக்கும் நிலை உள்ளது. மாவட்ட நிர்வாகம் புது பஸ் ஸ்டாண்டில் பொதுமக்களுக்கு தெரிவது போன்றும், பெருந்திட்ட வளாகத்தில் புதிதாகவும் ஏ.டி.எம்., மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











புதிய வீடியோ