உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / சென்னைக்கு தினசரி ரயில் அறிவிப்பு இல்லாததால் பயணிகள்  அதிருப்தி

சென்னைக்கு தினசரி ரயில் அறிவிப்பு இல்லாததால் பயணிகள்  அதிருப்தி

தேனி: இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக போடியில் இருந்து இயக்கப்படும் சென்னை சென்ட்ரல் ரயில் தினசரி ரயிலாக அறிவிக்காததால் மாவட்ட ரயில் பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். தேனி மாவட்டத்தில் அகல ரயில் பாதை அமைக்கப்பட்டு மே 2022 முதல் மதுரையில் இருந்து தேனிக்கு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. போடி ரயில் நிலையம் 2023ல் பயன்பாட்டிற்கு வந்தது. இதனால் 2023 ஜூன் முதல் போடி முதல் சென்னை சென்ட்ரல் வரை வாரத்திற்கு மூன்று நாட்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் 2 ஆண்டுகளுக்கு மேலாக 3 நாட்கள் மட்டும் இயக்கப்பட்டு வருகிறது. பயணிகளிடம் வரவேற்பு இருந்தாலும் இதனை தினசரி ரயிலாக மாற்ற ரயில்வே துறை நடவடிக்கை எடுக்கவில்லை. அதே போல் மாவட்டத்திற்கு ரயில் இயக்கப்பட்ட இரு ஆண்டுகளுக்கு மேல் ஆன நிலையிலும் எவ்வித சிறப்பு ரயில்களும் இயக்கப்படாதது பயணிகளிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. பொங்கல் பண்டிகைக்கு முன்பதிவு துவங்க உள்ள நிலையில் சென்னை ரயிலை தினசரி இயக்க நடவடிக்கை வேண்டும் என மாவட்டத்தை சேர்ந்த ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை