உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  கால்நடைகளால் நோயாளிகள் அச்சம்

 கால்நடைகளால் நோயாளிகள் அச்சம்

போடி: போடி அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. மருத்துவமனை நுழைவு வாயிலில் கேட் வசதி இருந்தும் பணியாளர்கள் இல்லாமல் திறந்த வெளியாக உள்ளது. இதனால் நாய், மாடு, கழுதை உள்ளிட்ட கால்நடைகள் தாராளமாக உலா வருகின்றன. சில நேரங்களில் மாடுகள் தங்களுக்குள் சண்டையிடும் போது நோயாளிகள் மிரண்டு அச்சம் அடைந்து வருகின்றனர். மருத்துவமனை வளாக பகுதிக்குள் சுற்றி திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ