உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / நடந்து சென்றவர் மயங்கி விழுந்து பலி

நடந்து சென்றவர் மயங்கி விழுந்து பலி

மூணாறு: கேரளா, எர்ணாகுளம் மாவட்டம் கோதமங்கலத்தை சேர்ந்தவர் ஷெனில் 42. இவரது நண்பருக்கு சொந்தமான மினி லாரி, மூணாறு அருகே வட்ட வடை சிலந்தியாறு பகுதியில் மரத்தடிகளை ஏற்றுவதற்கு பயன்படுத்தப்பட்டது. அதனை சொந்த ஊருக்கு ஓட்டிச் செல்ல வேறொரு நண்பருடன் ஷெனில் நேற்று வந்தார். சிலந்தியாறு பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த ஷெனில் திடிரென மயங்கி விழுந்து இறந்தார். தேவிகுளம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !