உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஓய்வூதியர்கள் சங்க செயற்குழு கூட்டம்

ஓய்வூதியர்கள் சங்க செயற்குழு கூட்டம்

போடி: போடிநாயக்கனூர் வட்ட ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க செயற்குழு கூட்டம் தலைவர் காந்தி தலைமையில் நடந்தது. செயலாளர் ரவிச்சந்திரன், பொருளாளர் ரபி அகமது கிட்வாய், துணைத் தலைவர் எஸ்.பரமசிவம், இணைச் செயலாளர்கள் ஞானசேகரன், பரமசிவம், அலுவலக செயலாளர் குமரேசன் முன்னிலை வகித்தனர். செயற்குழு உறுப்பினர்கள் லீலாவதி, பாக்கியம் வரவேற்றனர். மத்திய அரசு அறிவித்துள்ளபடி மூன்று சதவீதம் அகவிலைப்படி, 8வது ஊதியக்குழு தமிழக அரசு ஊழியர்கள், குடும்ப ஓய்வூதியர்களுக்கு வழங்கிட உத்தரவு பிறப்பிக்க வேண்டும். மருத்துவ காப்பீடு திட்டத்தில் உள்ள குறைபாடுகளை நீக்கி ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்களுக்கு அனைத்து மருத்துவமனையிலும் அனைத்து நோய்களுக்கும் மருத்துவ சிகிச்சை வழங்கிட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதோடு, அனைத்து துறைகளிலும் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ