உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / குறைகிறது பெரியாறு அணை நீர்மட்டம்

குறைகிறது பெரியாறு அணை நீர்மட்டம்

கூடலுார்:முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் குறைந்து வருவதைத் தொடர்ந்து தமிழகப் பகுதிக்கு திறக்கப்படும் நீரின் அளவு 467 கன அடியாக குறைக்கப்பட்டது.மழையின்றி தொடர்ந்து கடுமையான வெப்பம் நிலவுவதால் முல்லைப்பெரியாறு நீர்மட்டம் நேற்று காலை 6:00 மணி நிலவரப்படி 118.15 அடியாக இருந்தது. (மொத்த உயரம் 152 அடி). நீர்வரத்தும் குறைந்து நேற்று முன்தினம் வினாடிக்கு 13 கன அடியாக இருந்தது. நேற்று 'ஜீரோ' ஆனது. இதனால் தமிழகப் பகுதிக்கு குடிநீர் மற்றும் இரண்டாம் போக நெல் சாகுபடிக்காக திறக்கப்பட்டிருந்த 511 கன அடி நீர், நேற்று காலையில் இருந்து 467 ஆக குறைக்கப்பட்டது. லோயர்கேம்ப் பெரியாறு நீர் மின் நிலையத்தில் 45 மெகாவாட்டாக இருந்த மின் உற்பத்தி 42 ஆக குறைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !