உத்தமபாளையத்தில் புதிதாக 350 தெரு விளக்குகள் அமைக்க அனுமதி
உத்தமபாளையம்: உத்தமபாளையம் பேரூராட்சியில் புதிதாக 350 தெரு விளக்குகள் அமைக்க அனுமதி கிடைத்துள்ளது.உத்தமபாளையம் பேரூராட்சி, வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், ஒருங்கிணைந்த நீதிமன்றங்கள், கல்லூரி, நெடுஞ்சாலைத் துறை, பொதுப்பணித்துறை, கிளை சிறைச்சாலை என அனைத்து அலுவலகங்களும் உள்ள தாலுகா தலைமையிடமாக உள்ளது. இங்குள்ள 18 வார்டுகளில் 35 ஆயிரம் மக்கள் தொகை உள்ளனர். விரிவாக்க பகுதிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 1250 தெரு விளக்குகள் உள்ளன. கடந்த 5 ஆண்டுகளாக தெரு விளக்குகள் அமைக்கப்படவில்லை. புதிதாக உருவான விரிவாக்க பகுதிகள், நகரின் பல பகுதிகளில் தெரு விளக்குகள் அமைக்க வேண்டி பேரூராட்சி சார்பில் இயக்குநரகத்திற்கு கருந்துரு அனுப்பப்பட்டது.அதன்பேரில் புதிதாக நகரில் 350 தெரு விளக்குகள் அமைத்துக் கொள்ள பேரூராட்சிகளின் இயக்குநரகம் அனுமதி வழங்கியுள்ளது அதன் பேரில் தெரு விளக்குகள் தேவைப்படும் இடங்கள் கண்டறியப்பட்டு, தெரு விளக்குகள் அமைக்கும் பணிகள் துவங்க உள்ளதாக பேரூராட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.