ஆங்கில வழி கல்வியில் படிக்க கோரி மனு
தேனி: கடமலைக்குண்டு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி தர்ஷினிபிரபா, அவரது தந்தை பால்பாண்டியுடன் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தார். அதன்பின் அவர் கூறுகையில், கடமலைக்குண்டு பகுதியில் பள்ளியில் 5ம் வகுப்புவரை படித்தேன். 6ம் வகுப்பிற்கு கடமலைக்குண்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆங்கில வழிகல்வியில் சேர்ந்தேன். என்னுடன் 10 மாணவர்கள் அந்த வகுப்பில் படிக்கிறோம். ஆனால், ஆசிரியர்கள் தமிழ்வழிக்கல்வி வகுப்பில் சேர கூறுகின்றனர். ஆங்கில வழிகல்வி வகுப்பில் தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும்', என்றார்.