சென்னை- போடி ரயிலை தினசரி இயக்க மனு
தேனி: அகில பாரத கிரஹக் பஞ்சாயத் நுகர்வோர் அமைப்பின் தென்பாரத அமைப்பு செயலாளர் சுந்தர், இணை அமைப்பு செயலாளர் சத்தியபாலன் ஆகியோர் சென்னையில் உள்ள தெற்கு ரயில்வே முதன்மை பயணிகள் போக்குவரத்து மேலாளர் சுப்ரமணியன், மக்கள் தொடர்பு அதிகாரி ஓம்பிரகாஷ் நாராயணனிடம் மனு அளித்தனர். மனுவில், 'சென்னை போடி அதிவிரைவு ரயிலை தினசரி ரயிலாக இயக்க வேண்டும், மும்பை மதுரை ரயிலை துாத்துக்குடி வரை இயக்க வேண்டும், 'என கோரினர்.அமைப்பு நிர்வாகிகள் ஸ்ரீவேல்திபக் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.