உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / குழாய் உடைப்பு சீரமைப்பு தினமலர் செய்தி எதிரொலி

குழாய் உடைப்பு சீரமைப்பு தினமலர் செய்தி எதிரொலி

பெரியகுளம்: பெரியகுளம் - -வடுகபட்டி பைபாஸ் ரோடு அருகே சேதமடைந்த குடிநீர் பகிர்மான குழாய் உடைந்தது குடிநீர் வீணாகிறது. தினமலர் செய்தி எதிரொலியால் சீரமைக்கப்பட்டது.பெரியகுளம் ஒன்றியம் கீழவடகரை ஊராட்சிக்கு வைகை அணை கூட்டு குடிநீர் திட்டத்தில் இருந்து தினமும் 3 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்க வேண்டும். இதில் 50 சதவீதம் மட்டுமே குடிநீர் வாரியம் வழங்கி வருகிறது. இந்நிலையில் குடிநீர் பகிர்மான குழாய்கள் வடுகபட்டி வழியாக கீழ வடகரை ஊராட்சிக்கு செல்கின்றன. பகிர்மான குழாய்கள் செல்லும் நான்கு இடங்களில் குழாய் உடைந்து பல நாட்களாக குடிநீர் வீணாகிறது. கீழ வடகரை ஊராட்சியில் செயற்கையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.கடந்த மாதம் வடுகபட்டி செல்லும் பைபாஸ் ரோடு அருகே சேதமடைந்த குழாய் சீரமைப்பு பணிக்காக குடிநீர் வடிகால் வாரியம் பள்ளம் தோண்டியது. பணி தொடராததால் தினமும் ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகிறது. இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக குடிநீர் வடிகால் வாரியம் குழாய் உடைப்பை சரிசெய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ