மேலும் செய்திகள்
மாநில அளவிலான கராத்தே: கோவை வீரர்கள் பங்கேற்பு
30-Oct-2025
தேனி: தேனி மாவட்ட விளையாட்டு அரங்கில் தேசிய போட்டியில் பங்கேற்க உள்ள கபடி அணிக்கான விளையாட்டு வீரர்கள் தேர்வு நடந்தது. தமிழகத்தில் தேனி, சிவகங்கை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் அரசு விளையாட்டு விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கு கபடி பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்தாண்டு நடைபெற உள்ள தேசிய இந்திய பள்ளிகளுக்கிடையிலான போட்டியில் தமிழக விளையாட்டு விடுதி கபடி அணி பங்கேற்க உள்ளது. இப்போட்டிக்கான வீரர்கள் தேர்வு மாவட்ட விளையாட்டு அரங்கில் நேற்று துவங்கியது. போட்டிகள் 14,17,19 வயதிற்குட்பட்ட பிரிவுகளில் நடக்கிறது. மூன்று மாவட்ட விளையாட்டு விடுதிகளில் இருந்து வீரர்கள் பங்கேற்றனர். இன்று போட்டிகள் முடிவடைகிறது.
30-Oct-2025