உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / சிறுமிக்கு பாலியல் தொந்தரவு இளைஞர் மீது போக்சோ வழக்கு

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு இளைஞர் மீது போக்சோ வழக்கு

பெரியகுளம்: சிறுமியை திருமணம் செய்வதாக கூறி பாலியல் தொந்தரவு செய்த கோபிசெட்டிபாளையத்தைச் சேர்ந்த சதீஷ் 20, என்பவர் மீது போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி. இவரது தாய் இறந்துவிட்டார். சிறுமி அத்தை வீட்டிலிருந்து படித்தார். ஆறு மாதங்களுக்கு முன்பு கோபிசெட்டிபாளையத்தில் அத்தையின் உறவினர் வீட்டு திருவிழாவிற்கு சிறுமி சென்றார். அங்கு உறவினரான கோபிசெட்டிபாளையம் பழைய பள்ளிப்பாளையத்தைச் சேர்ந்தவர் சதீஷ் 20. 15 வயது சிறுமியை காதலிப்பதாக கூறினார். இந்நிலையில் பெரியகுளத்தில் இருந்த சிறுமியிடம், அலைபேசியில் பேசிய சதீஷ், கோபிசெட்டிபாளையம் வருமாறு அழைத்துள்ளார். கடந்த செப்.22ல் அங்கு சென்ற சிறுமியிடம் வீட்டில் யாரும் இல்லை. உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் எனகூறி பாலியல் தொந்தரவு செய்துள்ளார். தற்போது சிறுமியிடம் அலைபேசியில் தனக்கு வேறு இடத்தில் பெண் பார்ப்பதாகவும், இனிமேல் தன்னிடம் அலைபேசியில் பேச வேண்டாம் என தெரிவித்துள்ளார். சிறுமி புகாரில், பெரியகுளம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயராணி,சதீஷ் மீது போக்சோ வழக்கு பதிவு செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !