மேலும் செய்திகள்
மகன் மாயம் தாய் புகார்
07-Dec-2024
ஆண்டிபட்டி: டி.ராஜகோபாலன்பட்டி கூலித்தொழிலாளி கோவிந்தம்மாள் 67. இவருடன் வசித்த மருமகள் சிவரஞ்சனி 25, சண்முகசுந்தரபுரம் அருகே தனியார் மில்லில் வேலைக்கு சென்றார். வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு இரு நாட்களுக்கு முன் சென்றவர், வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் உறவினர்களிடம் விசாரித்தும், எந்த தகவலும் கிடைக்கவில்லை. கோவிந்தம்மாள் புகாரில் ஆண்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.:: கணவர் மாயம்
ஆண்டிபட்டி: மேக்கிழார்பட்டி சேர்ந்த கூலித்தொழிலாளி முத்துலட்சுமி 30. இவரது கணவர் முருகன் 39. நேற்று முன் தினம் வேலைக்கு சென்று விட்டு மதியம் முத்துலட்சுமி வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டில் கணவர் இல்லை. பல இடங்களில் தேடியும், உறவினர்களிடம் விசாரித்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. முத்துலட்சுமி புகாரில் ஆண்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.::இறந்த நிலையில் வாலிபர் உடல் மீட்புகூடலுார்: பட்டாளம்மன் கோயில் தெரு பாலாஜி 40. திருமணமாகி மகன், மகள் உள்ளனர். தேனி மாவட்ட குழந்தைகள் நலத்துறையின் கணக்காளராக பணிபுரிகிறார். வேலையில் இருக்கும் நெருக்கடி காரணமாக மன உளைச்சலில் இருந்தவர் வேலை வேண்டாம் என ராஜினாமா கடிதம் கொடுத்திருந்தார். டிச.6ல் வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீட்டிற்கு வராமல் இருந்ததால், குடும்பத்தினர் தேடினர். இந்நிலையில் லோயர்கேம்ப் குருவனத்துப் பாலம் அருகே முல்லைப் பெரியாற்றில் இறந்த நிலையில் பாலாஜியின் உடல் மீட்கப்பட்டது. லோயர்கேம்ப் போலீசார் விசாரிக்கின்றனர்.
07-Dec-2024