உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / போலீஸ் செய்திகள்...

போலீஸ் செய்திகள்...

கத்தியால் மிரட்டிய இருவர் கைதுதேவதானப்பட்டி: பெரியகுளம் அருகே மேல்மங்கலம் கீழத் தெரு பகுதியில் ஜெயமங்கலம் எஸ்.ஐ., முருகப்பெருமாள் தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர். அப்பகுதியைச் சேர்ந்த குப்பன் மகன் லோகேஷ் 19. அதே பகுதியைச் சேர்ந்த நாகபாண்டி 24, இரு வாலிபர்கள் கத்தி வைத்திருந்தனர். இருவரையும் கைது செய்த போலீசார், கத்தியை கைப்பற்றினர்.--மது பதுக்கிய இருவர் கைதுபோடி: துரைராஜபுரம் காலனி வீரன் 42. இவர் அனுமதி இன்றி விற்பனை செய்வதற்காக மது பாட்டில்கள், தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகளை பதுக்கி வைத்து இருந்தார். போடி அருகே மீனாட்சிபுரத்தை சேர்ந்த பாலமுருகன் 49. இவர் மது பாட்டில்களை பதுக்கி வைத்து இருந்தார். இருவரையும் போடி தாலுகா போலீசார் கைது செய்து, 39 மது பாட்டில்கள், 9 புகையிலை பாக்கெட்டுகளை கைப்பற்றினர்.புகையிலை பதுக்கியவர் கைதுபோடி: டி.வி.கே.கே., நகரை சேர்ந்தவர் கபிபுல்லா 53. இவரது பெட்டி கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகளை பதுக்கி வைத்து இருந்தார். போடி டவுன் போலீசார் இவரை கைது செய்து, 34 புகையிலை பாக்கெட்டுகளை கைப்பற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை