உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / போலீஸ் செய்திகள்.......

போலீஸ் செய்திகள்.......

ரவுடி என மிரட்டியவர் கைதுதேனி: மதுரை பச்சரிசிகாரர் தெரு கென்னடிகுமார் 53. விவசாய வேலைக்காக பருத்தி விதை வாங்க தேனி வந்தார். வைகை புதுாரில் இருந்து வடபுதுப்பட்டி செல்லும் ரோட்டில் இவரது நண்பர் ஜம்பு என்பவருடன் நின்றிருந்தார். அங்கு தேனி பாரஸ்ட் ரோடு தினேஷ்குமார் 29, வந்தார். தான் பெரிய ரவுடி எனக்கூறி கென்னடிகுமார் சட்டை பையில் இருந்த ரூ. 500ஐ எடுத்துக்கொண்டு கத்தியை காட்டி மிரட்டி சென்றார். கென்னடிக்குமார் அல்லிநகரம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் தினேஷ்குமாரை கைது செய்தனர்.மாணவி தற்கொலைதேனி: கூழையனுார் நடுத்தெரு பாலமுருகன். இவரது மகள் யுவஸ்ரீ 17. இவர் பிளஸ் 2 படித்தார். உடல் நிலை சரியில்லாமல் சில ஆண்டுகளாக அவதிபட்டு வந்தார். இந்நிலையில் வீட்டில் துாக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார். பெற்றோர் மாணவியை மீட்டு உப்புக்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டது. மேல்சிகிச்சைக்காக அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மாணவி உயிரிழந்தார். பாலமுருகன் புகாரில் வீரபாண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.பெண்ணை தாக்கியவர்கள் மீது வழக்குதேனி: பூதிப்புரம் கோட்டை மேட்டுத்தெரு ஆசைக்குமார். இவரது மனைவி கலா. பூர்வீக சொத்து தொடர்பாக ஆசைக்குமார், அவரது உறவினர் முருகதாஸ் இடையே பிரச்னை இருந்தது. இப்பிரச்னை தொடர்பாக தேனி நீதிமன்றத்தில் வழக்கு நடக்கிறது. இந்நிலையில் தோட்டத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த கலாவை, முருகதாஸ், அவரதுமனைவி மகேஸ்வரி தாக்கினர். காயமடைந்த கலா அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். இவரது புகாரில் பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ