உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / போலீஸ் செய்திகள்.........தேனி

போலீஸ் செய்திகள்.........தேனி

கொலை மிரட்டல்தேனி: அன்னஞ்சி முனிசாமி கோயில் தெருவில் முனியாண்டி, வெங்கடேசன் ஆகிய இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. அவ்வழியாக சென்ற சுக்குவாடன்பட்டி சக்திதெரு லோடுமேன் சேதுபதி 32, சண்டையை விலக்கிவிட்டார். ஆத்திரமடைந்த முனியாண்டி, சேதுபதியிடம் தகராறு செய்து கத்தியால் வெட்டி கொலை மிரட்டல் விடுத்தார். காயமடைந்த சேதுபதி புகாரில் அல்லிநகரம் போலீசார் விசாரிக்கின்றனர்.விபத்தில் எலக்ட்ரீசியன் காயம்தேனி: பூதிப்புரம் வாழையாத்துப்பட்டி மாதேஷ் 25, இவர் வேலைக்கு தேவையான பொருட்களை பூதிப்புரத்தில் உள்ள விக்னேஷ்வரம் என்பவரிடம் கொடுக்க டூவீலரில் சென்றார். அப்போது எதிரே பூதிப்புரம் பழனிசாமி கவுண்டன் தெரு அன்பரசன் 42, ஓட்டி வந்த ஆட்டோ மாதேஷ் டூவீலரில் மோதியது. விபத்தில் காயமடைந்த மாதேஷ் கம்பத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவரது புகாரில் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி