போலீஸ் செய்திகள் தேனி
தீப்பற்றி பெண் பலிதேனி: தேனி பவர் ஹவுஸ் தெரு ராணி 55. மனநிலை பாதிக்கப்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரியில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் வீட்டில் சமைப்பதற்காக விறகு அடுப்பில் மண்ணெண்ணை ஊற்றி பற்ற வைத்தார். அப்போது உடலில் தீபற்றியது. காயமடைந்தவரை மீட்டு அரசு மருத்துவக்கல்லுாரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி ராணி இறந்தார். அவரது மகன் தர்மர் புகாரில் தேனி போலீசார் விசாரிக்கின்றனர்.திருடியவர் கைதுதேனி: பின்னத்தேவன்பட்டி பள்ளிக்கூடத்தெரு சிவசாமி 33. போக்குவரத்து கழகத்தில் தற்காலிக பணியாளராக பணிபுரிகிறார். இவர் வீட்டில் ஏப்.,21ல் துாங்கியபோது வைத்திருந்த அலைபேசி காணாமல் போனது. சி.சி.டி.வி., கேமராவை ஆய்வு செய்த போது ஒருவர் வீடு புகுந்து திருடுவது தெரிந்தது. சிவசாமி அல்லிநகரம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டகருவேல்நாயக்கன்பட்டி ரோஷன் 21, என்பவரை கைது செய்தனர்.ஆட்டோ கவிழ்நதுஇருவர் காயம்தேனி: கருவேல்நாயக்கன்பட்டி வேலன் மதுரை ரோட்டில் ஆட்டோவை ஓட்டி சென்றார். ஆட்டோ சிப்காட் அருகே உள்ள தனியார் பள்ளி முன் சென்றபோது, எதிரே பேரையூர் கோட்டைபட்டி பாலமுருகன் ஓட்டி வந்த அரசு பஸ் மோதியது. இந்த விபத்தில் ஆட்டோ கவிழ்ந்து, அதில் பயணித்த ராபியத்துல் பசலியா, வெங்கடேசன் காயமடைந்தனர்.ராபியத்துல் பசலியா மகள் சிபானா ராணி பாத்திமா புகாரில் தேனி போலீசார் விசாரிக்கின்றனர்.