மேலும் செய்திகள்
நாளை (மே 21) மின்தடை..
20-May-2025
ஆற்றில் குதித்த முதியவர் உயிருடன் மீட்பு
13-May-2025
ஆற்றில் மூழ்கி முதியவர் பலிதேனி: அரப்படித்தேவன்பட்டி மந்தையம்மன் கோயில் தெரு சின்னாத்தேவர் 75. தனது மகன் சிவச்சாமியுடன் வசித்த முதியவர், உறவினரின் கிடா வெட்டுக்கு செல்வதாக கூறிசென்றார். பின் வீடு திரும்ப வில்லை. இந்நிலையில் மகன் சிவச்சாமி, கிடா வெட்டு நடக்கும் இடத்தில் சென்று தேடினார். அங்குள்ளவர்கள் சாப்பிட்டு சென்றுவிட்டார் என தெரிவித்துள்ளனர். காலையில் முதியவரின் உடல் இறந்த நிலையில் அரப்படித்தேவன்பட்டி வைகைஆற்றங்கரையில் கிடைத்துள்ளது. ஆற்றை கடந்து வீட்டிற்கு வர முயற்சித்த போது, எதிர்பாராதவிதமாக வைகை ஆற்றில் தண்ணீர் அதிகரித்ததால் தண்ணீரில் மூழ்கி சின்னாத்தேவர் இறந்துள்ளது தெரிந்தது. க.விலக்கு எஸ்.ஐ., பால்பாண்டியன் விசாரிக்கிறார்.டூவீலர் திருட்டுதேனி: பழனிசெட்டிபட்டி சுபாஷ் சந்திரபோஸ் தெரு கண்ணன் 40. ஷேர் மார்க்கெட் நிறுவனத்தில் பணிபுரிந்தார். அலுவல் பணிக்காக டூவீலரை பயன்படுத்தினார். மே 23ல் வேலைக்கு சென்று விட்டு வீட்டின் முன் நிறுத்திய டூவீலர் காணவில்லை. கண்ணன் புகாரில் பழனிசெட்டிபட்டி எஸ்.ஐ., ஜீவானந்தம் வழக்குப்பதிந்து விசாரிக்கிறார்.மது பதுக்கியவர் கைதுதேனி: வீரபாண்டி தப்புக்குண்டு அண்ணாநகர் ஜோதிராஜ் 48. இவர் தப்புக்குண்டு வி.சி.புரம் ரோடு காட்டு நாயக்கன்பட்டி பிரிவு அருகே ரூ.4500 மதிப்புள்ள 25 மதுபாட்டில்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தார். அவரை வீரபாண்டி போலீசார் கைது செய்தனர்.
20-May-2025
13-May-2025