உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / போலீஸ் செய்திகள்...

போலீஸ் செய்திகள்...

கணவர் கண்முன் மனைவி பலிதேனி: பெரியகுளம் வடுகப்பட்டி வேளாளர் தெரு வினோத்குமார் 32. இவரது மனைவி கவுசல்யா 27. இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். சின்னமனுாரில் உள்ள உறவினர் காதணி விழாவிற்கு சென்று மனைவியுடன் வீடு திரும்பினார். குமுளி திண்டுக்கல் பைபாஸ் ரோட்டில் அன்னஞ்சி கல்பாலம் அருகே நேற்று முன்தினம் இரவு டூவீலரில் வந்தார். பின்னால் பெரியகுளம் முத்துராஜ் ஓட்டிவந்த கார், டூவீலரின் பின்புறம் மோதியதில் துாக்கிவீசப்பட்ட இருவரும் கீழே விழுந்தனர். இதில் கவுசல்யா தலையில் காயம் ஏற்பட்டு சம்பவ இடத்தில் பலியானார். வினோத்குமார் தேனி அரசு மருத்துவக்கல்லுாரியில் சிகிச்சையில் உள்ளார். அல்லிநகரம் போலீசார் விசாரிக்கின்றனர். விபத்து நடந்த இடத்திற்கு அருகில் சபரிமலை செல்லும் பஸ்ஸூம், அங்கிருந்து வந்த வேனும் மோதி விபத்து நடந்தது. இதில் 13 பேர் காயமடைந்தனர். இதனால் ோக்குவரத்து போலீசார் இப்பகுதியை ஆய்வு செய்து வாகனங்களின் வேகத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ