உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / போலீஸ் செய்திகள்

போலீஸ் செய்திகள்

இருவர் மீது வழக்குதேனி: மதுரை மாவட்டம், பேரையூர் தாலுகா, எம்.கல்லுப்பட்டி, டி.கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் ஜெயபாக்கியம் 47. இவர் மதுரை மாவட்டம், துள்ளுகுட்டிநாயக்கனுார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிகிறார். இவரது கணவர் சாமிநாதன் டி.பாறைப்பட்டி பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்தார். இவர் 2024 டிச.29ல் கொடுவிலார்பட்டி தனியார் கல்லுாரி அருகில் நடந்த வாகன விபத்தில் உயிரிழந்தார். இறந்த சாமிநாதன் தங்கியிருந்த விடுதியில் அத்துமீறி நுழைந்த அரண்மனைப்புதுார் முல்லைநகர் தென்றல்தெரு கனிமொழி, பேரையூர் தாலுகா குடிசேரியை சேர்ந்த ரமேஷ் ஆகியோர் ரூ.52 ஆயிரம் மதிப்புள்ள அலைபேசி, பவர் பேங்க், டேபிள்பேன், லேப்டாப் உள்ளிட்ட பொருட்களை திருடிச்சென்றதாக மனைவி ஜெயபாக்கியம் அளித்த புகாரில் தேனி போலீசார் கனிமொழி, ரமேஷ் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.பஸ் சக்கரத்தில் பாய்ந்த ஒருவர் பலிதேனி: 45 வயது மதிக்கத்தக்க பெயர் விலாசம் தெரியாத ஆண் ஒருவர் தேனி புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து திட்டச்சாலையில் உள்ள கலெக்டர் அலுவலகம் ரோடு சந்திப்பின் அருகே நேற்று முன்தினம் மதியம் நின்றிருந்தார். அப்போது மதுரையில் இருந்து தேனி நோக்கி வந்த அரசு பஸ்சை டிரைவர் அண்ணாமலை ஓட்டி வந்தார். பஸ்சின் பின் சக்கரத்தில் 45 வயது மதிக்கத்தக்க நபர் பாய்ந்தார். இதில் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். சம்பவம் குறித்த தேனி இன்ஸ்பெக்டர் ராமலட்சுமி தலைமையிலான போலீசார் உடலை மீட்டு தேனி மருத்துவக்கல்லுாரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். அல்லிநகரம் வி.ஏ.ஓ.,மதுக்கண்ணன் புகாரில் போலீசார் பஸ் டிரைவர் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர். இச்சம்பவம் குறித்த வீடியோ வைரலானது.கடன் சுமையால் பெண் தற்கொலைபெரியகுளம்: அழகர்சாமிபுரம் அண்ணாநகரைச் சேர்ந்த மணிகண்டன் மனைவி கீதா 40. இவரது கணவர் மணிகண்டன் 5 ஆண்டுகளுக்கு முன் இறந்தார். கீதா டெய்லர் வேலை செய்து பிழைப்பு நடத்தினார். இவருக்கு சுபலட்சுமி, குருபிரசாத், ரித்தீஷ் என மூன்று பிள்ளைகள் உள்ளனர். குடும்ப தேவைக்காக அண்ணாநகரில் குடியிருக்கும் ஜோதி என்பவரிடம் வீட்டு பத்திரத்தை அடகு வைத்து இரு ஆண்டுகளுக்கு முன்பு ரூ.3 லட்சம் கடன் வாங்கியுள்ளார். மற்றவர்களிடமும் கடன் வாங்கியுள்ளார். ஜூலை 8 ம் தேதி இரவு ஜோதி பணம் கேட்டுள்ளார். கடன் வாங்கியவர்களுக்கு பணத்தை திரும்ப கொடுக்கமுடியவில்லை என மன உளைச்சலில் கீதா இருந்தார். இதனால் ஜூலை 9 ல் விஷம் குடித்தார். தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார். வடகரை போலீசார் விசாரிக்கின்றனர்.தீ பற்றி பெண் பலிபோடி: சிலமலை பிள்ளையார் கோயில் தெரு காமராஜ் 47. ஆடு மேய்க்கும் தொழிலாளி. இவரது மூத்த மகள் பாரதி 22. மன வளர்ச்சி இல்லாமல் இருந்துள்ளார். நேற்று முன் தினம் வீட்டில் ஆட்கள் இல்லாத போது, வீட்டில் இருந்த மெழுகுவர்த்தியில் தீ பற்ற வைத்து விளையாடி உள்ளார். எதிர்பாராத விதமாக நைட்டியில் தீ பிடித்துள்ளது. அலறியபடி வீட்டை விட்டு வெளியே வந்த பாரதியை அருகே இருந்தவர்கள் மீட்டு மதுரை அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். சிகிச்சை பலன் இன்றி பாரதி நேற்று இறந்தார். போடி தாலுாகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை