உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / போலீஸ் செய்திகள்...

போலீஸ் செய்திகள்...

தாய், மகன் மாயம் தேனி: அல்லிநகரம் வெங்கலாகோயில் தெரு வளர்மதி 31. இவரது கணவர் மாரிமுத்து 38, கொத்தனார் வேலை செய்கிறார். இத்தம்பதிக்கு மகன் கவின் 4, உள்ளார். ஜூலை 29ல் வேலைக்கு சென்று மதியம் வீட்டிற்கு மாரிமுத்து திரும்பியபோது, மகன் கவின், மனைவியை காணவில்லை. கணவர் புகாரில் அல்லிநகரம் போலீசார் தாய், மகனை தேடி வருகின்றனர்.::தொழிலாளி தற்கொலை தேனி: பழனிசெட்டிபட்டி நேரூஜி தெரு ராஜ்குமார் 33. வெல்டிங் தொழிலாளி. மது குடித்து வருவதை பழக்கமாக வைத்திருந்ததால், வயிற்றுவலி ஏற்பட்டது. இந்நிலையில் வீட்டில் விரக்தியில் துாக்கிட்டு தற்கொலை செய்தார். பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.. டீக்கடையில் மது விற்றவர் கைது: 14 லிட்டர் பறிமுதல் கூடலுார்:கேரளா குமுளி அருகே வண்டிப்பெரியாறு அரசு மருத்துவமனை அருகே டீ கடையில் மதுவிலக்கு தடுப்பு இன்ஸ்பெக்டர் கோகுல் கிருஷ்ணன் தலைமையில் சோதனை மேற்கொண்டனர். தடையை மீறி மது விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கிருந்த 14 லிட்டர் மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக டீக்கடை நடத்தி வந்த கண்ணன் 71, என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். விசாரணையில் இவர் சட்டவிரோதமாக இந்திய தயாரிப்பு வெளிநாட்டு மதுபானங்களை வாங்கி அதிக லாபத்திற்காக விற்பனை செய்வது தெரிய வந்தது.::


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை