போலீஸ் செய்திகள் (லோகோ வைக்கவும்)
கஞ்சா வைத்திருந்தவர் கைது பெரியகுளம்: தெற்குதெருவைச் சேர்ந்தவர் முகிலன் 24. திருவள்ளுவர் சிலை பின்புறம் 10 கிராம் கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்தார். தென்கரை எஸ்.ஐ., செந்தில்குமார், முகிலனை கைது செய்து, கஞ்சாவை கைப்பற்றி விசாரிக்கிறார். பெண் தற்கொலை தேனி: கருவேலநாயக்கன்பட்டி வள்ளுவர் காலனி தனியார் பள்ளி ஆசிரியர் இளங்கோவன் 40. இவரது மனைவி ரம்யா 34. இவர் குழந்தை இல்லாத வருத்தத்தில், உடல்நிலை சரியில்லாமல் அவதியடைந்து வந்தார். இந்நிலையில் வீட்டில் துாக்கிட்டு கொண்டார். அவரை மீட்டு அரசு மருத்துவக் கல்லுாரிக்கு இளங்கோவன், வீட்டு அருகில் வசிப்பவர்கள் கொண்டு சென்றனர். ரம்யாவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இளங்கோவன் புகாரில் தேனி போலீசார் விசாரிக்கின்றனர். கொலை மிரட்டல் தேனி: ஆண்டிபட்டி பொன்னம்மாள்பட்டி மணிகண்டன் 40. இவரது மனைவி முருகேஸ்வரி. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. குடும்ப பிரச்னை காரணமாக முருகேஸ்வரி தாடிச்சேரியில் உள்ள தந்தை வீட்டிற்கு வந்தார். இந்நிலையில் அவரை அழைத்து செல்ல மணிகண்டன், மகளுடன் வந்தார். முருகேஸ்வரியை வீட்டிற்கு அழைத்த போது முருகேஸ்வரி, அவரது உறவினர்கள் முனியாண்டி, முத்துபிரசாத் இணைந்து மணிகண்டன், அவரது மகளை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். மணிகண்டன் புகாரில் மனைவி முருகேஸ்வரி உட்பட மூவர் மீது வீரபாண்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.