போலீஸ் செய்தி
கடன் தராதவரை கத்தியால் குத்தியவர் கைது தேனி: தப்புக்குண்டு விநாயகர் கோவில் தெரு மதுபாலன் 24. இவர் அதே பகுதியை சேர்ந்த ஜோதிராஜ் 49, என்பவரிடம் கடன் கேட்டார். ஜோதிராஜ் பணம் தர மறுத்தார். இந்நிலையில் ஜோதிராஜ் வீட்டிற்கு சென்ற மதுபாலன் கத்தியால் ஜோதிராஜை குத்தி, கடன் தராவிட்டால் கொலை செய்து விடுவதாக மிரட்டினார். அருகில் இருந்தவர்கள் தகராறை விலக்கினர். ஜோதிராஜின் மனைவி சீனியம்மாள் புகாரில் வீரபாண்டி போலீசார் மதுபாலனை கைது செய்தனர். மனைவி மாயம்: கணவர் புகார் தேனி: வடபுதுப்பட்டியில் ஜவுளி கடை நடத்துபவர் மணிகண்டன் . இவரது மனைவி சத்தியா. இருவரும் சில மாதங்களுக்கு முன் காதல் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் ஆக.,17 ல் மணிகண்டன் கடை முடிந்து வீடு திரும்பிய போது சத்தியா வீட்டில் இல்லை. தெரிந்த இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. கணவர் புகாரில் அல்லிநகரம் போலீசார் விசாரிக்கின்றனர். பள்ளி மாணவர் மாயம் தேனி: பெரியகுளம் தென்கரை பட்டாளம்மன் கோவில் தெரு ரெங்கன், இவரது மனைவி மாயழகி. இவர்களுக்கு இரு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இளைய மகன் கார்த்திக் 14, அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளில் 9ம் வகுப்பு படித்து வந்தார். இவர் ஆக.,22ல் இரவு வீட்டில் இருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. தாயார் புகாரில் தென்கரை போலீசார் விசாரிக்கின்றனர். புகையிலை விற்றவர் கைது தேனி: பழனிசெட்டிபட்டி போலீசார் பூதிப்புரம் ரோட்டில் புகையிலை விற்பனை தடுப்பு தொடர்பாக சோதனையில் ஈடுபட்டிருந்தனர். பூதிப்புரம் பிரபாகரன் பெட்டிக்கடையில் சோதனை செய்த போது விற்பனைக்காக வைத்திருந்த ரூ.5400 மதிப்பிலான 10.12 கிலோ புகையில் பொருட்களை கைப்பற்றினர். பிரபாகரனை கைது செய்தனர். மகள் மாயம்: தாய் புகார் தேனி: கோடாங்கிபட்டி போடேந்திரபுரம் ரோடு ஈஸ்வரன். துணி வியாபாரம் செய்கிறார். இவரது மனைவி ஜெயலட்சுமி. இளையமகள் யுவராணி 25, நர்சிங் படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். ஜெயலட்சுமி ஆக., 22ல் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க சென்று திரும்பினார். வீட்டில் இருந்த யுவராணி காணவில்லை.தாயார் புகாரில் பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர். ஜல்லி கடத்தியவர் மீது வழக்கு தேனி: மாவட்ட கனிமவளத்துறை உதவி இயக்குநர் கிருஷ்ணமோகன் தலைமையில் அலுவலர்கள் அம்மாபட்டி டொம்புச்சேரி ரோட்டில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அவ்வழியாக டொம்புச்சேரி நடுத்தெரு கருப்பையா ஓட்டி வந்த லாரியை நிறுத்தி சோதனையிட்டனர். லாரியில் ரூ.4800 மதிப்பிலான ஒரு யூனிட் ஜல்லி கற்கள் இருந்தது. ஆனால், ஜல்லி கொண்டு செல்வதற்கான நடைசீட்டு இல்லாமல் இருந்தது. ஜல்லி, லாரியுடன் பழனிசெட்டிபட்டி போலீசில் உதவி இயக்குநர் புகார் அளித்தார். புகாரின் பேரில் பழனிச்செட்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர். டூவீலரில் துப்பட்டா சிக்கி புதுப் பெண் பலி போடி: ஜமீன் தோப்பு தெருவை சேர்ந்தவர் தீபக் ராஜா 31. தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி தீபிகா 29. திருமணமாகி மூன்று மாதங்கள் ஆகிறது. நேற்று இருவரும் போடி முந்தல் ரோட்டில் டூவீலரில் கோயிலுக்கு சென்று உள்ளனர். அப்போது தீபிகாவின் துப்பட்டா டூவீலரின் பின் சக்கர செயினில் சிக்கி கொண்டது. இதில் தீபிகா தடுமாறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் அடைந்தார். போடி அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். டாக்டர் பரிசோதனை செய்தல் தீபிகா வரும் வழியில் இறந்து விட்டதாக தெரிவித்து உள்ளார். குரங்கணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். முதியவர் பலி பெரியகுளம் : லட்சுமிபுரம் பஸ்ஸ்டாப் அருகே சுப்பிரமணி 81. முகவரி இல்லாத முதியவர் உடல்நலம் பாதித்து இருந்தார். தாமரைக்குளம் பிட்-2 வி.ஏ.ஓ., அனீஸ் பாத்திமா, சுப்பிரமணியை ஆம்புலன்ஸ் உதவியுடன் தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சுப்பிரமணி இறந்தார். தென்கரை போலீசார்விசாரிக்கின்றனர்.