உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / போலீஸ் செய்திகள்... ::

போலீஸ் செய்திகள்... ::

கஞ்சா பதுக்கியவர் கைது போடி: ராசிங்காபுரம் அழகர்சாமி கோயில் தெரு ஹரி 19. இவர் தடை செய்யப்பட்ட கஞ்சாவை பதுக்கினார். போடி தாலுகா போலீசார் ஹரியை கைது செய்து, அவரிடம் இருந்த 10 கிராம் கஞ்சாவை கைப்பற்றி விசாரிக்கின்றனர். புகையிலை பதுக்கியவர் கைது போடி: சிலமலை மேற்கு தெரு ரமேஷ் 39. இவர், தனது பெட்டிக் கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகளை சட்டவிரோத விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தார். போடி தாலுகா போலீசார் ரமேஷை கைது செய்து, 75 புகையிலை பாக்கெட்டுகளை கைப்பற்றி விசாரிக்கின்றனர். டூவீலர் விபத்தில் ஒருவர் பலி சின்னமனுார்: கீழப்பூலானந்தபுரம் கருப்பையா ஆசாரி தெரு குமார் 41. நேற்று முன்தினம் தனது டூவீலரில் சீலையம்பட்டியில் இருந்து கீழப்பூலானந்தபுரம் வந்தார். செங்குளம் வளைவில் கட்டுப்பாட்டை இழந்த டூவீலர் தடுமாறி கீழே சரிந்து, விபத்து நடந்தது. இதில் அங்கிருந்தவர்கள் காயம் அடைந்த குமாரை சின்னமனுார் மருத்துவமனையில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். சின்னமனுார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை