மேலும் செய்திகள்
வாகனம் மோதி முதியவர் பலி
25-Jul-2025
ஆண்டிபட்டி:ஆண்டிபட்டி அருகே கோவில்பட்டியை சேர்ந்தவர் தங்கவேல் மனைவி முத்துப்பிள்ளை 80, வயது முதிர்வால் வேலைக்கு செல்ல முடியாமல் தேனி அரசு மருத்துவக் கல்லூரி அருகே யாசகம் பெற்றார். மனநலம் பாதித்த இவரது மகன் ராஜேந்திரன் தனது தாயை அடிக்கடி துன்புறுத்தி வந்துள்ளார். இந்நிலையில் தேனி அரசு மருத்துவக் கல்லூரி அருகே வெளியில் கட்டிலில் அமர்ந்திருந்த தனது தாய் முத்துப் பிள்ளையை கட்டிலோடு இழுத்து வந்து மருத்துவமனை முன்பு மதுரை தேனி ரோட்டில் நடுவே அமர வைத்தார். சாலை நடுவே நடக்க முடியாத மூதாட்டி கட்டிலில் அமர்ந்த நிலையில் இருப்பதைக் கண்ட பலரும் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்த பொதுமக்கள் க.விலக்கு போலீசாருக்கு தகவல் அளித்தனர். அங்கு வந்த போலீசார் மூதாட்டியை பத்திரமாக மீட்டு ரோட்டின் ஓரம் மரத்தடியில் அமர வைத்தனர். மனநலம் பாதித்த ராஜேந்திரன் திடீரென்று ரோட்டில் படுத்துள்ளார். அவரையும் வலுக்கட்டாயமாக இழுத்து ஓரமாக அமர வைத்தனர். மனநலம் பாதிக்கப்பட்ட மகன் தனது தாயை அடிக்கடி துன்புறுத்தி வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளதாக அப்பகுதி மக்கள் போலீசாரிடம் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து மூதாட்டியை முதியோர் காப்பகத்திற்கும், மனநலம் பாதித்த ராஜேந்திரனை மனநல காப்பாத்திற்கும் அனுப்பும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்கள் நடமாட்டம், போக்குவரத்து அதிகம் உள்ள பகுதியில் நடந்த இச்சம்பவம் பலருக்கும் மன வேதனை ஏற்படுத்தியது.
25-Jul-2025