மலைப் பாதையில் பாலிதீன் அகற்றம்
கம்பம் : கம்பமெட்டு மலைப்பாதை சபரிமலை செல்லும் வாகனங்கள் ஒரு வழிப்பாதையாக பயன்படுததுகின்றனர். சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள், அங்கு திரியும் குரங்குகளுக்கு உணவு பொருள்கள் வழங்க பாலிதீன் பைகளில் வைத்து வீசி செல்கின்றனர். இதனால் மலைப் பாதையில் பாலிதின் பைகள் அதிகம் காணப்பட்டது. கம்பம் வனத்துறை, க. புதுப்பட்டி பேரூராட்சி பணியாளர்கள் இணைந்து பாலிதீன் குப்பையை சுத்தம் செய்தனர். பக்தர்களிடம் விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர்.