உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பங்களாமேட்டில் பொங்கல் விழா

பங்களாமேட்டில் பொங்கல் விழா

தேனி: தேனி பங்களாமேடு கர்னல் ஜான் பென்னிகுவிக் நகர் குடியிருப்போர் நலச்சங்கத்தின் சார்பில், பென்னிகுவிக் பிறந்தநாள் விழா, பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. பென்னிகுவிக் படத்திற்கு மாலை அணிவித்து பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். சங்க தலைவர் பெரியணன் தலைமை வகித்தார். செயலாளர் செல்வக்குமார், பொருளாளர் ராஜேஷ்கண்ணன் முன்னிலை வகித்தனர். நீர்வளத்துறை உதவிப் பொறியாளர் ராஜகோபால் பங்கேற்றனர். விளையாட்டு போட்டிகள் நடந்தது. நலச்சங்கத்தின் சார்பில், தேனி நகராட்சிக்கு ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள களை எடுக்கும் இயந்திரம் வழங்கப்பட்டது. இதனை நகராட்சித் தலைவர் ரேணுப்பிரியா,துணைத் தலைவர் செல்வம் பெற்றுக் கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை