உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  பாஸ்போர்ட் சேவை பெற தபால்துறை அழைப்பு

 பாஸ்போர்ட் சேவை பெற தபால்துறை அழைப்பு

தேனி: பொது மக்கள் நலனை கருத்தில் கொண்டு இந்திய தபால் துறை சார்பில் போடி தபால் நிலையத்தில் பாஸ்போர்ட் சேவை துவங்கி, பொது மக்கள் பயன் பெற்று வருகின்றனர். இந்த சேவை மூலம் பாஸ்போர்ட் விண்ணப்பம், ஆவண சரிபார்ப்பு, கைரேகை பதிவு உள்ளிட்ட பணிகளை இங்கு எளிதில் மேற்கொள்ளலாம். இச்சேவையை மக்கள் பெற www.passportindia.gov.inஎன்ற இணையத்தளம் மூலம் நியமனம் பெற்று, பின்னர் போடி தலைமை தபால் நிலையம் சென்று பயன் பெறலாம். இந்த வசதியை பொது மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தேனி கோட்ட தபால்துறை கண்காணிப்பாளர் குமரன் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ