உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தாய்மார்களுக்கு  கர்ப்ப கால ஆலோசனை

தாய்மார்களுக்கு  கர்ப்ப கால ஆலோசனை

தேனி : தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை குழந்தைகள் நல சிகிச்சைத்துறையின் சார்பில், உலக தாய்ப்பால் வார விழாவை முன்னிட்டு சீமாங் மையத்தின் வெளிநோயாளிகள் பிரிவில் பரிசோதனைக்காக வந்த 60 கருவுற்ற தாய்மார்களுக்கு கர்ப்பகாலஆலோசனை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. துறை இணைப் பேராசிரியர்கள் டாக்டர் வசந்தமலர் தலைமை வகித்தார். டாக்டர் மகாலட்சுமி முன்னிலை வகித்தார். கருவுற்ற தாய்மார்கள் 9 மாதங்கள் வரை எவ்வாறு உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும். உடலில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப எவ்வாறு நலமுடன் பார்த்துக் கொள்வது, சுகப்பிரசவத்திற்கான வாழ்வியல் நடைமுறைகளை எவ்வாறு பழக்கப்படுத்திக் கொள்வது குறித்து ஆலோசனைகள் வழங்கினர். சந்தேகங்களுக்கும் விடையளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை