உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கருவுற்ற சிறுமி: கணவர் உட்பட ஐவர் மீது வழக்கு

கருவுற்ற சிறுமி: கணவர் உட்பட ஐவர் மீது வழக்கு

ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி அருகே ராஜக்காள்பட்டி பிரதாப் 25. இவர் சிவகாசியில் பிளஸ் 1 படித்து வரும் தனது உறவினர் மகளான சிறுமியை காதலித்தார். இவர்கள் காதலிக்கும் விபரம் பெற்றோருக்கு தெரிய வர, உறவினர்கள் ஜாதக பொருத்தம் பார்த்தனர். ஜாதக பொருத்தம் இல்லை என்று ஜோதிடர் தெரிவித்தார். இதனால் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்தனர். இந்நிலையில் பிரதாப் சிவகாசியில் உள்ள ஒரு கோயிலில் சிறுமிக்கு தாலி கட்டி, திருமணம் செய்தார். தற்போது சிறுமி கர்ப்பமாக உள்ளார். இளவயது திருமணம் குறித்து ஆண்டிபட்டி ஊர் நல அலுவலர் லட்சுமிக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து ஆண்டிபட்டி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் சிறுமியை திருமணம் முடித்து பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கணவர் பிரதாப், அவரது பெற்றோர் இன்பராஜ், பாண்டியம்மாள், சிறுமியின் பெற்றோர் ராஜா, பந்தன செல்வி ஆகியோர் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை