முதன்மை மாவட்ட நீதிபதி பொறுப்பேற்பு
தேனி; தேனி முதன்மை மாவட்ட நீதிபதியாக ஸ்வர்ணம் ஜெ.நடராஜன் நேற்று பொறுப்பு ஏற்றார்.இவர் சிவகங்கையில் முதன்மை மாவட்ட நீதிபதியாக பணியாற்றிய இங்கு மாறுதலாகி வந்துள்ளார். அவருக்கு சார்பு நீதிபதிகள், மாவட்ட நீதிபதிகள், தலைமை குற்றவியல் நீதிபதி, மாஜிஸ்திரேட்கள், வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள், மூத்த வழக்கறிஞர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். தேனி முதன்மை மாவட்ட நீதிபதியாக இருந்த அறிவொளி, சிவகங்கை முதன்மை மாவட்ட நீதிபதியாக பணி மாறுதலில் சென்றார்.