உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மழை வேண்டி ஊர்வலம்

மழை வேண்டி ஊர்வலம்

கூடலுார்: கூடலுார் ராஜகாளியம்மன் கோயில், செல்வ காளியம்மன் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா நடந்தது. கடந்த சில நாட்களாக மழையின்றி விவசாயம் பாதிக்கப்படுவதால் மழை வேண்டி சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதிகாலை பெண்கள் மாவிளக்கு எடுத்து வழிபட்டனர். மாலையில் மழை வேண்டி முளைப்பாரி ஊர்வலம் சென்றனர். கோயிலில் இருந்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று கோயிலை அடைந்தனர். இவ்விழாவை முன்னிட்டு சிறுவர்கள், பெண்கள், முதியவர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடந்தன. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி