உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / காங்கிரஸ் கட்சி சொத்துக்களை மீட்க சொத்து பாதுகாப்புக்குழு சுற்றுப்பயணம் ரூ.20 கோடி சொத்துக்களை மீட்க நடவடிக்கை

காங்கிரஸ் கட்சி சொத்துக்களை மீட்க சொத்து பாதுகாப்புக்குழு சுற்றுப்பயணம் ரூ.20 கோடி சொத்துக்களை மீட்க நடவடிக்கை

தேனி : தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சொத்து பாதுகாப்பு குழு தலைவர் தங்கபாலு தலைமையில் 6 பேர் தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ரூ.20 கோடி மதிப்பிலான சொத்துக்களை மீட்க நடவடிக்கை எடுத்துள்ளதாக,'' என காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் செல்வம் தெரிவித்தார். அவர் கூறியது: காங்கிரசில் கட்சி ரீதியாக 77 மாவட்டங்கள் உளளன. சொத்து பாதுகாப்பு, மீட்புக்குழு தலைவர் தங்கபாலு தலைமையில் ஜூலை 24, 25 ல் தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஆய்வு செய்தனர். இதில் தேனி மாவட்டம் பெரியகுளம் வைகை அணை ரோட்டில் 10 சென்ட் நிலம், சின்னமனுார் சீப்பாலக்கோட்டை ரோட்டில் உழவர் சந்தைக்கு எதிரே உள்ள 10 சென்ட் நிலத்தில் உள்ள பெரிய கட்டடம், ஆண்டிபட்டி காமராஜர் சிலை அருகே பின்புறம ஒன்றரை சென்ட்கட்டடத்துடன் கூடிய இடம், கூடலுாரில் மெயின் பஜாரில் 23 சென்ட் இடம், பஜாரில் 3 சென்ட் இடங்கள் உள்ளன. இதுதவிர திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மூஞ்சிக்கல் காங்., கட்சி அலுவலகத்தை சுற்றியுள்ள காலியிடம், அம்மாவட்டத்தில் உள்ள பிற இடங்கள் என ரூ.20 கோடி மதிப்புள்ள சொத்துக்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மகாத்மா காந்தி உப்பு சத்தியாகிரகம் மேற்கொண்ட போதும், காமராஜர் சுற்றுப் பயணத்தின் போதும் கட்சியின் மேம்பாட்டிற்காக பலர் எழுதி கொடுத்த சொத்துக்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம். முறைப்படி கட்சி பெயரில் சொத்துக்கள் பதிவு செய்யப்பட்டு, மேலிடத்தில் ஒப்படைக்கப்படும். மீதியுள்ள 22மாவட்டங்களில் விரைவில் சுற்றுப்பயணம் நடத்த உள்ளோம்.'', என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ