இலவம் பஞ்சிற்கு உரிய விலை கோரி ஆர்ப்பாட்டம்
தேனி: தேனி கலெக்டர் அலுவலகம் முன் , இலவம் பஞ்சிற்கு உரிய விலை கிடைக்கவும், அரசே கொள்முதல் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருஷநாடு இலவம் பஞ்சு சாகுபடி செய்துள்ள விவசாயிகள், மா.கம்யூ கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் கண்ணன் தலைமை வகித்தார். மா.கம்யூ., மாவட்ட செயலாளர் ராமசந்திரன் முன்னிலை வகித்தார். நிர்வாகி அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்றனர். கலெக்டரிடம் மனு அளிக்க விவசாயிகள் மாலை வரை காத்திருந்தனர். அங்கேயே உணவு சமைத்து சாப்பிட்டனர். திடீரென கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மக்கள் தொடர்பு முகாம் முடித்து கலெக்டர் ரஞ்ஜீத்சிங் வந்த பின் அவரிடம் மனு அளித்தனர்.