உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தி.மு.க.,வினர் ஆக்கிரமித்த பஞ்சமி நிலத்தை மீட்க கோரி ஆர்ப்பாட்டம் குறைதீர் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு

தி.மு.க.,வினர் ஆக்கிரமித்த பஞ்சமி நிலத்தை மீட்க கோரி ஆர்ப்பாட்டம் குறைதீர் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு

தேனி: தேனியில் பஞ்சமி நிலத்தை ஆக்கிரமித்துள்ள தி.மு.க.,வினரிடம் இருந்து மீட்டு வீடு இல்லாத தாழ்த்தப்பட்டவர்களுக்கு வழங்க கோரி கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. தேனி கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. டி.ஆர்.ஓ., மகாலட்சுமி, மாவட்ட வழங்கல் அலுவலர் மாரிசெல்வி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் காமாட்சி உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர். 360 மனுக்கள் வழங்கப்பட்டன. இதில் முக்கிய மனுக்கள் விபரம்: கேபிள் டிவி., ஆப்ரேட்டர்கள் பொதுநலச்சங்க மாவட்ட செயலாளர் ஆண்டவர் தலைமையில் சங்கத்தினர் வழங்கிய மனுவில், 'அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் புதிய செட்டப் பாக்ஸ்களை வாங்க நிர்பந்திப்பதை தடுக்க', கோரினர். பூதிப்புரம் பேரூராட்சி ஆதிப்பட்டி கிராம தலைவர் பழனிசாமி தலைமையில் பொதுமக்கள் வழங்கிய மனுவில், 'எங்கள் பகுதியில் புதிதாக டாஸ்மாக் மதுக்கடை அமைக்க கூடாது ',என வலியுறுத்தப்பட்டிருந்தது. மாதர் சங்க மாவட்ட தலைவி மீனா தலைமையில் போடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்த பெண்கள் மனுவில், தையல் பயிற்சி முடித்து சான்றிதழ் பெற்றுள்ளோம். எங்களுக்கு இலவச தையல் இயந்திரம் வழங்க நடவடிக்கை எடுக்க கோரினர்.ஆண்டிபட்டி தாலுகா கடமலை மயிலாடும்பாறை தங்கமாள் புரம் கிராமத்தினர் பா.ஜ., ஒன்றிய நிர்வாகி தெய்வம் தலைமையில் வழங்கிய மனுவில், 'கிராமத்தில் பல ஆண்டுகளாக குடியிருந்து வருகிறோம். வீட்டிற்கு வரி உள்ளிட்டவை செலுத்துகிறோம். எங்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி உள்ளனர்.புரட்சி தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் வீரகுரு தலைமையில் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு மனு அளித்தனர். மனுவில், தேனி புது பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள பஞ்சமி நிலத்தை தி.மு.க.,வினர் ஆக்கிரமித்துள்ளனர். அந்த பஞ்சமி நிலத்தை வீடு இல்லாத தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினருக்கு வழங்க வேண்டும் என கோரினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை