உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கால்நடை மருந்தகத்திற்கு ஸ்கேன் கருவி வழங்கல்

கால்நடை மருந்தகத்திற்கு ஸ்கேன் கருவி வழங்கல்

உத்தமபாளையம்: உத்தமபாளையம் கால்நடை மருந்தகத்திற்கு ரூ.14 லட்சம் மதிப்புள்ள ஸ்கேன் கருவி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பசுக்களுக்கு சினை பார்த்தல், வயிறு கோளாறுகளை தெரிந்து கொள்ளுதல் எளிதாகும் என்று கால்நடை டாக்டர்கள் கூறியுள்ளனர்.தேனி மாவட்டம் வேளாண் சார்ந்த மாவட்டமாகும். வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிர்கள் சாகுபடியும், கால்நடை வளர்ப்பும் பிரதானமாகும். எனவே தான் இங்கு கால்நடை மருத்துவ கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் துவங்கப்பட்டது. போடி, பெரியகுளம், தேனியில் மட்டுமே கால்நடை மருத்துவமனைகள் உள்ளன. கம்பம், சின்னமனுார், உத்தமபாளையம் உள்ளிட்ட ஊர்களில் கால்நடை மருந்தகங்கள் உள்ளன. ஆனால் போதிய வசதிகள் இல்லாத நிலையே இருந்தது. இந்நிலையில் உத்தமபாளையம் கால்நடை மருந்தகத்திற்கு ரூ.14 லட்சம் மதிப்புள்ள ஸ்கேன் கருவி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பசுக்களின் சினை பார்த்தல், வயிறு பிரச்னைகளை தெரிந்து கொள்ளுதல், நாய்கள் உள்ளிட்ட பிராணிகளின் நோய்கள் பற்றி தெரிந்து கொள்ள உதவும். உத்தமபாளையம் பகுதியில் அதிக எண்ணிக்கையில் மாடுகள், பசுக்கள், நாய்கள், கோழிகள் வளர்க்கப்படுகின்றன. இவற்றிற்கு ஸ்கேன் செய்து நோய்க்கு தகுந்தவாறு சிகிச்சையளிக்க இந்த ஸ்கேன் உதவும். இதே போன்ற ஸ்கேன் கம்பம், சின்னமனுார் கால்நடை மருந்தகங்களுக்கும் அனுமதிக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை