உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மனநலிவு பாதித்த குழந்தையின் பெற்றோருக்கு உளவியல் பயிற்சி முக்கியம் மருத்துவக் கல்லுாரி குழந்தைகள் நலத்துறை தலைவர் தகவல்

மனநலிவு பாதித்த குழந்தையின் பெற்றோருக்கு உளவியல் பயிற்சி முக்கியம் மருத்துவக் கல்லுாரி குழந்தைகள் நலத்துறை தலைவர் தகவல்

'மனநலிவு பாதிப்புள்ள குழந்தை செல்வங்களை பராமரிக்க பெற்றோர்களுக்கு உளவியல் பயிற்சி முக்கியம்.' என, மாவட்ட ஆரம்ப இடையீட்டு மையத்தின் தலைவர் டாக்டர் செல்வக்குமார் தெரிவித்தார்.தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையின் குழந்தைகள் நல சிகிச்சைத்துறையின் கீழ் மாவட்ட ஆரம்ப இடையீட்டு மையம் இயங்குகிறது. இத்துறையின் தலைவர் டாக்டர் செல்வக்குமார், இம்மையத்தின் தலைவராக உள்ளார். இங்கு சிகிச்சை அளிக்கப்படும் குழந்தைகள், சிறார்களுக்கு சிறப்பான பயிற்சி வழங்கி, குணப்படுத்தி வருகின்றனர். இந்த மையத்தின் பிற டாக்டர்கள், மேலாளர், நர்சிங் பணியாளர்களுடன் இயங்குகிறது. இங்கு தற்போது மனநலிவு பாதிப்பு ஏற்பட்ட 40 குழந்தைகள் பதிவு செய்யப்பட்டு, சிகிச்சையும், பயிற்சியும் வழங்கப்படுகிறது. ஆண்டுதோறும் மார்ச் 21ல் மனநலிவு நோய் (டவுன் சிண்ட்ரோம்) நாள் அனுஷிஷ்டிக்கப்பட்டு, உலகளவில் கொண்டாடப்படுகிறது.மன நலிவு பாதித்த (டவுன் சிண்ட்ரோம்) குழந்தைகள் பராமரிப்பு, பயிற்சிகள், பெற்றோர்களுக்கான உளவியல் ஆலோசனைகள் இந்த மாவட்ட ஆரம்ப இடையீட்டு மையத்தில் தொடர்ந்து சிறப்பு பயிற்சியாளர்களை கொண்டு வழங்கப்படுகிறது.இதுகுறித்து தினமலர் நாளிதழின் 'அன்புடன் அதிகாரி' பகுதிக்காக அவர் அளித்த பேட்டி.

பிறக்கும் குழந்தைகளுக்கு மனநலிவு பாதிப்பை இளம் பெற்றோர் எவ்வாறு கண்டறிவது

பிறந்த குழந்தைகள் தனித்துவமாக உடல் அம்சங்களை கொண்டிருந்தால் மனநலிவு நோய்க்கான மரபணு (Karotyping) பரிசோதனை மூலம் உறுதி செய்யப்பட்டு, அதற்குப் பின் குழந்தைகளுக்கான ஆரம்ப நிலை சிகிச்சைகள், அதாவது இருதயம், ரத்தத்தில் (தைராய்டு, ரத்த அளவு) பரிசோதனைகளும் செய்யப்பட்டு பாதிப்பை அளவை கண்டறிகிறோம்.மனநலிவு என்பது பிறக்க போகும் குழந்தைகளுக்கு ஏற்படும் அறிவுசார் குறைபாடுகள், சில உடல் சார்ந்த குறைபாடுகள் ஆகும். இதனை மருத்துவக் கல்லுாரியில் இயங்கிவரும் மாவட்ட ஆரம்ப இடையீட்டு மையத்தில் (Distrcit Early intervention enter) பதிவு செய்து சிகிச்சை அளிக்கிறோம். அதுவும் பாதிப்பின் அளவுகளை கண்டறிந்து சிறந்த பயிற்றுனர்களை வைத்து, டாக்டர்களின் மேற்பார்வையில் சிகிச்சை அளித்து வருகிறோம். 21 வயதிற்கு மேல் வரும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் பரிசோதனையின் மூலம் டவுன் சிண்ட்ரோம் வருவதற்கான காரணிகளை கண்டறிந்துவிடலாம்.

குழந்தைகள், பெற்றோர்களுக்கான பயிற்சிகள் குறித்து

பின் சிறப்புப் பயிற்சிகள், பேச்சுப் பயிற்சி, இயன்முறை செயல்முறை பயிற்சி, பெற்றோர்களை மனதளவில் தயார்படுத்த உளவியல் ஆலோசனை அளித்து வருகிறோம். ஏனெனில் இம்மாதிரியான பாதிப்படைந்த குழந்தைகள் கூடுதல் கவனிப்பும், கண்காணிப்பும் அவசியமாகிறது. இந்த இடத்தில் பல பெற்றோர்கள் மனதளவில் சோர்வு ஏற்படுகிறது. கடவுள் மேல் பாரத்தை இறக்கிவைத்துவிட்டு, தீவிர பயிற்சி அளிக்கவும், மனதளவிலும் அவர்களை தயார்படுத்த உளவியல் பயிற்சி அளிக்கப்படுகிறது.

பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பயிற்சிக்கான செலவினங்கள் குறித்து

குழந்தைகளுக்கான சிகிச்சை செலவினங்களுக்கு தமிழக அரசின் அடையாள அட்டை வழங்கப்பட்டு அதன் மூலம் உதவித் தொகை அளிக்கப்பட்டு வருகிறது. இதனை பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்கான பொது மக்கள் மருத்துவக்கல்லுாரியில் உள்ள மாவட்ட ஆரம்ப நிலை இடையீட்டு மையத்தின் மேலாளரை அணுகலாம்.

பாதிப்பை குணப்படுத்த முடியுமா

தீவிர பயிற்சி, தொடர் சிகிச்சை மூலம் 90 சதவீதம் குணப்படுத்த முடியும். அதனால்தான் ஆரம்ப நிலையிலேயே கண்காணித்து தீவிர சிகிச்சை அளித்து வருகிறோம். குறிப்பாக பெற்றோர்களின் அளப்பறிய கண்காணிப்பும், பராமரிப்பும் இதில் முக்கிய பங்காற்றுகின்றன. இதில் பயிற்சிக்கு இடையீட்டு மையத்திற்கு அழைத்து வரும் பெற்றோர் பல நேரங்களில் தொடர் பயிற்சி மேற்கொள்ளாமல் இருப்பது பாதிப்பின் வீரியத்தை கூட்டுகிறது. இதனால் தொடர் பயிற்சி, சிகிச்சை மூலம் எளிதாக குணப்படுத்தலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை