உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  மக்கள் தொடர்பு முகாம்

 மக்கள் தொடர்பு முகாம்

பெரியகுளம்: பெரியகுளம் தாலுகா, தாமரைக்குளம் பிட் 2 வருவாய் கிராமம் ஜல்லிபட்டி ஊராட்சியில் மக்கள் தொடர்பு முகாம் கலெக்டர் வைத்திநாதன் தலைமையில் நடந்தது. எம்.எல்.ஏ., சபரி ஐங்கரன் முன்னிலை வகித்தார். ஆர்.டி.ஓ., கவிதா, தாசில்தார் மருதுபாண்டியன், பி.டி.ஓ.,க்கள் ஜெகதீஸ்வரி, புவனேஸ்வரி, ஊராட்சி செயலர் பாண்டியராஜ் பங்கேற்றனர். பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர். பட்டா மாறுதல், வீட்டுமனைப் பட்டா, அரசு திட்டங்களில் உதவித்தொகை, முதல்வர் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம், மக்களைத்தேடி மருத்துவம், மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனம்,மகளிர் சுய உதவிக் குழுக்கள் உட்பட 460 பயனாளிகளுக்கு ரூ.8,32,57,929 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை