உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கடமலைக்குண்டு அருகே பிடிபட்ட மலைப்பாம்பு

கடமலைக்குண்டு அருகே பிடிபட்ட மலைப்பாம்பு

கடமலைக்குண்டு: கடமலைக்குண்டு அருகே எலுமிச்சை தோட்டத்தில் பிடிபட்ட மலைப்பாம்பு வனத்துறை மூலம் மலைப்பகுதியில் விடப்பட்டது.கடமலைக்குண்டு அருகே பாலூத்து மலை அடிவாரத்தில் செல்வம் என்பவரின் எலுமிச்சை தோட்டம் உள்ளது. நேற்று அதிகாலை எலுமிச்சை பழங்கள் பறிப்பதற்காக பத்துக்கும் மேற்பட்ட பெண்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் எலுமிச்சை மரத்தின் அடியில் மலைப்பாம்பு இருப்பதை பார்த்துள்ளனர். அதிர்ச்சி அடைந்த அவர்கள் கடமலைக்குண்டு தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். கடமலைக்குண்டு தீயணைப்பு நிலைய அலுவலர் வீரபத்திரன் தலைமையில் தீயணைப்பு அலுவலர்கள் 8 அடி நீளம் இருந்த மலைப்பாம்பை பிடித்து கண்டமனூர் வனச்சரக அலுவலகத்தில் ஒப்படைத்தனர். வனத்துறையினர் மலைப்பாம்பை பாதுகாப்பாக அப்பகுதியில் உள்ள வனப்பகுதியில் விட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை