மேலும் செய்திகள்
குழந்தை சாவு போலீஸ் வழக்கு
04-Oct-2024
தேனி: ராஜஸ்தான் மாநிலம் ஜலுார் மாவட்டத்தை சேர்ந்தவர் ரமேஷ்குமார் 24. இவர் தேனி கடற்கரை நாடார் தெருவில் செல்போன் உதிரி பாகங்கள் விற்பனை கடை வைத்துள்ளார். இவரது கடையில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த நாகாராம் 19, ஓம்பிரகாஷ், மனோகர்குமார் உள்ளிட்டோர் வேலை பார்த்தனர். இவர்கள் அனைவரும் சுப்பன்செட்டி தெருவில் வீடு எடுத்து தங்கி இருந்தனர். நாகாராம் அவரது ஊரைச் சேர்ந்த பெண்ணை காதலித்து வந்தார். நேற்று வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது உடலை மீட்ட ரமேஷ்குமார் உள்ளிட்டோர் சிகிச்சைக்காக தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். புகாரில் தேனி போலீசார் விசாரிக்கின்றனர்.
04-Oct-2024